“மாணவச் செல்வங்களின் விபரீதமுடிவுகள் துயரத்தை தருகிறது” – ஓபிஎஸ் உருக்கம்..!

12 September 2020, 10:07 am
Quick Share

அரியலூரைச் சேர்ந்த மாணவன் நீட் தேர்வின் மீதான அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு நீட் தற்கொலை நிகழ்ந்துள்ளது.

மருத்த மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ளது. இந்த நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1 லட்சத்து 17ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 14 நகரங்களில் 240 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா என்ற மாணவி நீர் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்துள்ளார். அச்சத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான ஜோதி இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவி இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் விபரீதமுடிவுகள் துயரத்தை தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 3

0

0