”செருப்ப கழட்டி அடிச்சுருவேன்” : அரசு பேருந்தில் பெண் பயணியை அவமதித்த ஓட்டுநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 5:25 pm
Bus Driver Insult -Updatenews360
Quick Share

தென்காசி : பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்ட பெண் பயணியை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்துவிட்டு பெண் பயணிகள் அவமதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தென்காசியில், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்ட பெண்ணை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்க முயன்ற வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணை, உரிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு வேறு இடத்தில் இறக்கி பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் மரியாதை குறைவாக நடத்தியுள்ளதாக அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.

இதைத் தட்டி கேட்ட பெண்ணை அவமரியாதை செய்த ஓட்டுநர், செருப்ப கழட்டி அடித்துவிடுவேன் என கூற, அந்த பெண்ணும் தனது மரியாதை இழக்க கூடாது என்பதற்காக திருப்பி பேசினார். இருவரும் மாறி மாறி அநாகரீகமான வார்த்தைகளில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 258

0

0