கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலன் : கதவை தட்டிய கணவருக்கு காத்திருந்த அடுத்தடுத்த அதிர்ச்சி!!

4 February 2021, 7:53 pm
Illegal Contact Suicide - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : குஜிலியம்பாறை அருகே கள்ளக்காதல் ஜோடி வீட்டில் தனிமையில் இருந்தபோது அதை நேரில் கணவர் பார்த்ததால் மனவேதனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா உள்ளியக்கோட்டயை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 40). கரூரில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

தற்போது பூஞ்சோலை விநாயகர் கோவில் அருகே வசித்து வரும் நிலையில் அதன் அருகே காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ரமேஷ்(வயது 35) என்பவருக்கும் நாகலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளத் தொடர்பாக மாறியதாக சொல்லப்படுகிறது.

நேற்றிரவு வேல்முருகன் வீட்டில் இல்லாதபோது நாகலட்சுமி வீட்டிற்கு சென்ற ரமேஷ் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காலை 5 மணியளவில் வேல்முருகன் கதவை தட்டியபோது அதிர்ச்சி அடைந்த இருவரும் வெகு நேரமாக கதவை திறக்காமல் இருந்துள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கதவை திறந்ததும் அதன் பின் உள்ளே சென்ற வேல்முருகன் தனது ஆடையை மாற்றியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கட்டிலுக்கு அடியில் ஒருவர் பதுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் உறவினர்களை அழைத்து கூறியுள்ளார்.

அதைப் பார்த்த உறவினர்கள் மற்றும் வேல்முருகன் ஆத்திரத்தில் ரமேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் குஜிலியம்பாறை காவல் நிலையத்திற்கு சென்ற வேல்முருகன் அங்கு புகார் அளித்ததாகவும் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் காலையில் வருமாறும் கூறியுள்ளனர்.

பின்பு காவல் நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கணவருக்கு கள்ளக்காதல் விஷயம் தெரிந்து விட்டது என்ற வருத்தத்தில் நாகலட்சுமி வீட்டில் உள்ள கழிவறை சென்று வருகிறேன் என்று கூறி வீட்டின் கதவை பூட்டி விட்டு தூக்கில் தொங்கியதாக சொல்லப்படுகிறது.

வெகுநேரமாகியும் நாகலட்சுமி வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாகலட்சுமி தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு குஜியிம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த குஜியிம்பாறை போலீசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்குப்பதிவு செய்து ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர். தகாத தொடர்பால் இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரை விட்டு விட்டு பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Views: - 36

0

0