திரையரங்குகள் திறக்க அனுமதி கோரிக்கை: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரை சந்திக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு
Author: kavin kumar7 August 2021, 8:58 pm
திரையரங்குகளை திறக்க அனுமதி கோரி தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்திக்க முடிவு எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1.500 கோடி ரூபாய் அளவிற்கு திரையரங்கு சார்ந்த வியாபாரம் நஷ்டம் அடைந்துள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்குமாறு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்திக்க தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
அதில் திரையரங்குகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம் எடுத்துக் கூற முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோரையும் சந்தித்து பேச திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக ஒரு தனி குழு அமைப்பது எனவும் ஆலோசித்தனர். அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தையும் கணினி மயமாக்குவது எனவும் முடிவு எடுத்துள்ளனர்.
0
0