அலுவலருக்கு கொரோனா : வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூடல்!!

11 September 2020, 6:26 pm
Tirpur RTO Closed - updatenews360
Quick Share

திருப்பூர் : வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது

திருப்பூர்-பல்லடம் சாலை வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் .

இந்நிலையில் அவர் பணிபுரிந்து வந்த அலுவலகம் முழுவதும் கிருமி நாசினியால் சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவருடன் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Views: - 4

0

0