மாஸ்க் அணியாத தம்பதியிடம் சாதிப் பெயரை கேட்ட காவலர்!!

By: Udayachandran
9 October 2020, 10:28 am
Police Issue - Updatenews360
Quick Share

திருப்பூர் : முக கவசம் அணியாமல் வந்தவரிடம் அபராதம் விதிக்கும் போது ஜாதி பெயரை கேட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர்-பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவரிடம், பெருமாநல்லூர் ஆயுதப்படை காவலர் காசிராஜன் அபராதம் விதிக்க, அவருடைய விபரங்களை சேகரிக்கும் போது சாதியின் பெயரை கேட்டதால் ஆத்திரம் அடைந்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது ஜாதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால் காவலர் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் சாதி பெயர் கேட்பது விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனை தொடர்ந்து பெருமாநல்லூர் காவல்நிலைய பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் காசிராஜனை மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் உத்தரவிட்டார்.

Views: - 92

0

0