கனமழை எதிரொலி : பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!!

7 September 2020, 10:35 am
Tirupur Panchalinga Aruvi - updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பருவமழையானது தீவிரமடைந்ததையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த சில தினங்களாக அருவியில் நீர்வரத்தின்றி காணப்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும் வெள்ளத்தில் சூழ்ந்த்துள்ளது.

கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0