தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து ‘நல்ல முடிவு‘ : அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்!!

Author: Udayachandran
10 October 2020, 4:58 pm
theatre - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திரையரங்கு திறப்பது பற்றி விரைவில் முதல்வர் முடிவு செய்வார் என்றும், அதிமுக ஆட்சியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் 13ந்தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகை தர உள்ளதால், முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்.செ.ராஜூ ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம்
பேசுகையில் மத்தியரசின் தொல்லியல் துறையில் பட்டயபடிப்பில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மத்தியரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திரையரங்குகள் திறப்பது பற்றிய மத்தியரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறோம்,ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துரையினருக்கு அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது.மத்தியரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டுள்ளது தவிர கட்டயமாக திரையரங்கு திறக்க சொல்லவில்லை என்றும், இருப்பினும் திரையரங்கு உரிமையாளர் கோரிக்கை, தொழிலாளர்களின் நலன் கருதி ஆலோசனை செய்து விரைவில் திரையரங்கு திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

சுதந்திர தினத்தின் போது தாழ்த்தபட்ட சமூகத்தினை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றப்பட அனுமதிக்கவில்லை என்றதும், உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்தது. ஊராட்சி செயலாளரை பதவி நீக்கம் செய்ததாகவும், அரசுக்கு எவ்வித பாகுபாடும் கிடையாது,அதிமுக ஆட்சியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 34

0

0