தங்கம் விலை இன்று குறைந்தது: சவரனுக்கு ரூ.24 குறைவு…!!

21 May 2021, 12:04 pm
Gold_Jewellery_Updatenews360
Quick Share

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.24 குறைந்து 36,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீப காலமாக தங்கம் விலை திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4588 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் 4944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 39552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் 4947 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராம் வெள்ளி 76.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 76400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 752

0

0