ஏப்.7.,: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

7 April 2021, 9:30 am
As petrol hits century, CNG may be the all-rounder of the mobility game
Quick Share

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்து வருவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. அதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58க்கும், டீசல் விலை ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Views: - 43

0

0