சடலத்தின் மீது அமர்ந்து யாகம்… நடு நடுங்க வைத்த அகோரிகள் : நான் கடவுள் பட பாணியில் நடந்த விநோத பூஜை!!! (வீடியோ)
Author: Babu Lakshmanan22 December 2021, 7:33 pm
திருச்சி : திருச்சியைச் சேர்ந்த அகோரி மணிகண்டன் காசியில் உள்ள கங்கையில், சடலத்தின் மீது அமர்ந்து யாக பூஜை நடத்தினார்.
காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் ஏற்படுத்தி, அங்கு காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில் மார்கழி மாத மண்டல பூஜைக்காக காசிக்கு சென்ற அகோரி மணிகண்டன், தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு சக அகோரிகளுடன் நள்ளிரவில் கங்கைக்கரையில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார்.
அப்போது அகோரி ஒருவர் நான் கடவுள் படத்தில் காண்பது போல தலைகீழாக நின்று பூஜை செய்தார். மேலும், சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு முழங்கி பூஜையில் கலந்து கொண்டனர். இந்த யாக பூஜையானது காளிக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜை எனவும், இதன் மூலம் இறந்தவரின் உடலுக்கு ஆன்மா சாந்தி அளிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுவதாக அகோரிகள் கூறுகின்றனர்.
மேலும் இது போன்ற சடலத்தின் மீது அமர்ந்து யாகம் நடத்துவது என்பது அகோரிகள் காசியில் வழக்கமாக செய்யப்படும் பூஜைகளில் ஒன்று என கூறுகின்றனர்.
0
0