ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட இரண்டு பேர் படுகொலை : உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

Author: Udayachandran
12 October 2020, 10:53 am
Maduria Murder- Updatenews360
Quick Share

மதுரை : ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான கிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு அந்த ஊரில் உள்ள மலை அருகே பேசிக் பேசிக்கொண்டிருந்தார். அதிகாலை வரை வீட்டிற்கு வராமல் இருந்ததை அறிந்த உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தபோது கிருஷ்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கீழே கிடந்துள்ளார். மேலும் அதே ஊரை சேர்ந்த எலெக்ட்ரிசியனான முனியசாமி என்பவரும் படுகொலை செய்யப்பட்ட கிடந்துள்ளார்.

இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சம்பவ இடத்தில் கருப்பாயூரணி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி உடலை வாங்க கிராமத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர், இதனிடையே குற்றவாளிகளை கருப்பாயூரணி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 48

0

0