பைக் மீது மோதி வாகன ஓட்டியை தரதரவென இழுத்து சென்ற தண்ணீர் லாரி : அதிர்ச்சி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2021, 7:31 pm
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் தண்ணீர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் நேற்று புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப தனது வாகனத்தில் சென்ற பின்புறம் வேகமாக வந்த தண்ணீர் லாரி இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பழனிசாமி, வலது புறம் செல்லும் போது இன்டிகேட்டரை பயன்படுத்தாததும், பின்னால் வந்த தண்ணீர் லாரி பைக் ஓவர் டேக் செய்யும் போது விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0