எனக்கு நீ 7வது ஆளு… அட்ஜஸ்ட் பண்ணுலனா கொன்னுடுவேன் : கணவனை மிரட்டிய பலே மனைவி..!!

19 February 2021, 8:25 pm
mayiladudurai mrg- updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சினிமா பட பாணியில் டிக் டாக் செயலி மூலம் 7 பேரை திருமணம் செய்த பெண் மீது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மயிலாடுதுறையை சேர்ந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி சேர்ந்தவர் பாலகுரு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்த ரஜபுநிஷா முகநூலில் பாலகுருவிடம் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையில் இது காதலாக மாறி, இருவரும் இரு வீட்டாரின் ஒப்புதலோடு, மணக்குடியில் உள்ள பொரையான் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பின்பு இவர்கள் சேந்தங்குடி உள்ள சிவப்பிரியா நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். டிரைவர் வேலை பார்க்கும் பாலகுரு அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். அப்போது, ரஜபு நிஷா டிக்டாக் செய்து பேஸ்புக் மூலம் பல ஆண்களுடன் பேசி பழகி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாலகுருவிற்கு ரஜபுநிஷா மீது சந்தேகம் வரவே, மனைவியின் செல்போனை எடுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த செல்போனில் அதிர்ச்சியூட்டும் விதமாக, பல்வேறு ஆண் நண்பர்களுடன் டிக்டாக் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரஜபு நிஷாவிடம் அவர் கணவர் தொலைபேசியில் கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ரஜபுநிஷா கூறிய வார்த்தைகளை கேட்டு பாலகுரு அதிர்ச்சி அடைந்தார். நான் உன்னை மட்டும் திருமணம் செய்யவில்லை. உன்னைப் போல பணத்துக்காக பல ஆண்களை திருமணம் செய்து உள்ளேன் என கூறியதை கேட்டு திகைத்துப்போய் நின்றார் பாலகுரு.

மேலும் தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை காதலித்து, அவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். பின்பு எங்கள் வாழ்க்கையில் தலையீட்டால் பார்த்திபனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போன பாலகுரு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 70,000 பணமும், ஒரு பவுன் தங்கச் சங்கிலியும் திருடிக்கொண்டு, ரஜபுநிஷா வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ரஜபுநிஷாவின் அம்மாவிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பாலகுரு பேசியுள்ளார். அப்போது, “அவரது அம்மா தனது மகள் என்னுடைய ஆலோசனைப்படியே 7 பேரை திருமணம் செய்து உள்ளார்,” என்று தலைகனமாக கூறியுள்ளார்.

“நீ இந்த விஷயங்களில் இருந்து ஒதுங்கிக் கொள். இல்லையெனில் உன்னை கொலை செய்துவிடுவோம்,” என அவரது தாயாரும் பாலகுருவை மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொய்யாக திருமணம் செய்து ஏமாற்றிய ரஜபுநிஷா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாலகுரு உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பாலகுரு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் தன்னைப் போன்று மேலும் பல ஆண்கள் ஏமாற்ற படுவதற்குள் ரஜபுநிஷாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Views: - 116

0

0