வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம்! மரத்தில் கட்டி வைத்து மர்மநபருக்கு “தர்மஅடி“!!

14 August 2020, 5:07 pm
Tirupur Woman Harrassed - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி, மர்ம நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த இரு நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். பொதுமக்கள் அவரிடம் விசாரித்த பொழுது சரியான பதில் அளிக்காமல் அங்கிருந்து நழுவியுள்ளார்.

இந்தநிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து பல்லடம் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் முரளி என்பதும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கட்டிட வேலைக்காக சில நாட்களுக்கு முன்பு பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்த அந்த நபரை போலீசார் விசாரணைக்காக பல்லடம் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

Views: - 12

0

0