வழிப்பறிப்பின் போது கூச்சலிட்டதால் பெண் குளத்தில் தள்ளி கொலை!! பிரபல ரவுடி கைது!!

8 February 2021, 5:12 pm
Theft Turned As Murder - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : செயின் பறிக்க எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே பூந்தோப்பு புன்னத்துவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 45 வயதான மேரிஜெயா.

இவர் நேற்று மாலை மூளகுமூடு பகுதியிலுள்ள ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பூந்தோப்பு நல்ல பிள்ளைகுளம் பகுதியில் நடந்து வரும்போது முளகுமூடு பகுதியை சேர்ந்த மெர்லின்ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் மேரிஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மேரிஜெயா கூச்சலிட்டார். மேரிஜெயாவின் சத்தத்தை கேட்ட அப்பகுதியியினர் திரண்டு வருவதை பார்த்த மெர்லின்ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் தாங்கள் மாட்டி கொள்வோம் என்ற எண்ணத்தில் மேரிஜெயாவை குளத்தில் தள்ளிவிட்டனர்.

பொதுமக்கள் திரண்டு தப்பிஓடிய மெர்லின்ராஜை மடக்கி பிடித்தனர் ,அவரது கூட்டாளிகள் தப்பி சென்றனர். இந்நிலையில் குளத்தில் விழுந்த மேரிஜெயா வெள்ளத்தில் தத்தளித்து உயிரிழந்தார் இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் மெர்லின்ராஜை கைது செய்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த மேரிஜெயா உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் தப்பி ஓடியதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மெர்லின்ராஜை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து திருவட்டார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செயின்பறிப்பில் ஈடுபட்ட மெர்லின்ராஜ் ராணுவத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்குட்பட்டு வெளியேற்றபட்டவர் என்றும் இவர் மீது பல்வேறு காவல்நிலையத்தில் அடிதடி, கட்டபஞ்சாயத்து, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் தெரியவந்தது மேலும் தப்பி ஓடிய இவரது கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேரி ஜெயா அமுதாவின் உடல் இன்று மதியம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிணவறை முன்பு மேரி ஜெயா அமுதாவின் உறவினர்கள் மற்றும் அவரது சொந்த ஊரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கணவரை முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தோடு கோஷங்கள் எழுப்பினர்.

கொலையாளிகளின் ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை பிணத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் நாகர்கோவில் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0