காரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 11லட்சம் ரொக்கம் பறிமுதல்: கேரளா மாநில நபர்களிடம் விசாரணை

Author: Udhayakumar Raman
2 September 2021, 9:45 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் காரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 11லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல், கொண்டு வந்த கேரளா மாநில நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் வழக்கமான ரோந்து பணியில் கே.கே நகர், ஈவேரா சாலையில உள்ள அரிசி மில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூபாய் 11லட்சம் பணம் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சரியான முறையில் அவர்கள் பதில் கூறாததால். மேலும், அந்த கார் கேரள மாநில பதிவு எண் கொண்ட படியால் காவல்துறையினர் அந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த பணத்தை திருச்சி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு லாரி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பைசல் மற்றும் அகமது என தெரியவந்தது. மேலும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தார் இந்தியா முழுவதும் லாரி ஏஜென்சிஸ் நடத்தப்பட்டு வருவதும் தெரியவந்தது. இந்நிலையில் கேரளாவில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகளுக்கு இவர்கள் அங்கிருந்து கார் மூலம் சென்று அந்த லாரி டிரைவரிடம் பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு வந்த லாரிகளின் ஓட்டுனர்கள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவும், டீசல் போடுவதற்கான பணம் கொடுக்க சென்றதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, தங்களிடம் பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லை என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு கார் மற்றும் பணத்தை பெற்று செல்ல அறிவுறுத்தினர். அவர்கள் தங்களிடம் உள்ள காருக்கு உண்டான ஆவணங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்து விட்டு காரை கொண்டு சென்றனர். ஆனால் பணம் கொண்டு வந்ததற்கான ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Views: - 111

0

0