புதுச்சேரியில் 115 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

11 November 2020, 3:04 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 115 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 36114 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 83 நபர்களுக்கும், காரைக்காலில் 6 நபர்களுக்கும், ஏனாமில் 9 நபர்களுக்கும் மாஹேவில் 17 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1077 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 34432 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 1 நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 605 உயர்ந்துள்ளது. மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 36114 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தகவல்.

Views: - 25

0

0