கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது

14 October 2020, 8:46 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 86 வயது மூதாட்டியை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மங்காபுரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உத்தரவின் பேரில் நகர் காவல் சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் மங்காபுரம் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மங்காபுரம் தனியார் பள்ளி மைதானம் அருகே அய்யம்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி முத்தம்மாள் என்பவர் கையில் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மூதாட்டி முத்தம்மாளை கைது செய்தனர்.

Views: - 33

0

0