கேரள மாநிலத்திற்கு லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…

Author: kavin kumar
18 August 2021, 1:55 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் அருகே லால்குடியிலிருந்து கேரள மாநிலத்திற்கு லாரியில் கடத்தி வந்த 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரிலிருந்து டாரஸ் லாரியில் 20 டன் ரேஷன் அரிசியை கடத்தி வருவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது லாரியில் 20 ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா வடபாதி மங்கலம், உச்சிவாடி, தாமரைக்குளம் தெருவைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் பாண்டியன்(51) லாரியில் ரேஷன் அரிசியை கேரளா மாநிலத்திற்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பறிமுதல் செய்த லாரியையும்,லாரி டிரைவரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Views: - 242

0

0