கொடைக்கானல் மலைப்பகுதியில் தென்பட்டது 22 டிகிரி சூரிய ஒளிவட்டம்: சூரிய ஆராய்ச்சி கூட விஞ்ஞானிகள் தகவல்..!!

Author: Aarthi Sivakumar
24 June 2021, 5:36 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 22 டிகிரி சூரிய ஒளிவட்டம் தென்பட்டதாக சூரிய ஆராய்ச்சி கூட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நண்பகல் நேரத்தில் 22டிகிரி சூரிய ஒளி வளையம் தென்பட்டதாக சூரிய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வளிமண்டலத்தின் உயர்ந்த மேற்பரப்பில் உருவாகின்ற மெல்லிய மேகங்களை சிற்றஸ் என அழைப்பதாகவும், இவற்றில் சில நேரங்களில் 20 மைக்ரான் அளவிற்கும் குறைவான நுண்ணிய பனித்துளிகளில் சூரிய ஒளிபட்டு ஒளிச்சிதறல் ஏற்பட்டு இந்த வளையம் தோன்றுவதாக சூரிய ஆராய்ச்சி கூடவிஞ்ஞானி எபினேசர் தெரிவித்தார்.

இதன் முழு வட்ட பரிமானம் 44 டிகிரி அளவில் இருந்தாலும், அவ்வட்டத்தின் ஆர அளவை கொண்டு உலகம் முழுவதும் இது 22 டிகிரி ஒளி வட்டம் என அழைக்கப்படுவதாக அவர் கூறினார்.

Views: - 296

0

0