தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை: கட்டுமான பணிக்கு கொண்டு சென்ற ரூ.3.30 லட்சம் பறிமுதல்..!!
6 March 2021, 4:36 pmதிருவண்ணாமலை: ஆரணி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டின் கட்டுமான பணிக்கு கொண்டு சென்ற 3 லட்சத்து 29ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மலைகுழந்தை. இவர் தற்போது சென்னை எண்ணுர் அனல்மின் நிலையத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகின்றார்.
மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மலைகுழந்தை அவரது மனைவி இளவரசி மற்றும் பிள்ளைகளுடன் செய்யார் தாலுக்கா வள்ளலார் நகரில் வசித்து வருகின்றார். தற்போது மலைகுழந்தை தனது சொந்த கிராமத்தில் வீடு கட்டி வருகின்றார். அதனால் செய்யாரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் 3லட்சத்து 29ஆயிரத்து 500ரூபாய் சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்றார்.
அப்போது ஆரணி அருகே உள்ள இரும்பேடு கூட்ரோடு அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சமி தலைமையில் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் 3லட்சத்து 29ஆயிரத்து 500ரூபாய் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தினை சீல் வைத்து திருவண்ணாமலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
0
0