புளியந்தோப்பில் 30 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
29 November 2020, 9:37 pmசென்னை: புளியந்தோப்பில் சில்லறை கடைகளுக்கு குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சிறு கடைகளுக்கே சென்று விற்று வருவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆடு தொட்டி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் மணலி பகுதியைச் சேர்ந்த சாகுல்ஹமீது என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் குட்கா பாக்கெட்டுகள் சில இருந்தன. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், மணலி பகுதியில் இருந்து குட்காவை வாங்கி புளியந்தோப்பு பகுதியில் உள்ள சில்லறை கடைகளில் விற்று வருவதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில், ஆட்டோவில் குட்கா பொருட்கள் ஏற்றி புளியந்தோப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோவில் இருந்து 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருநமது 30 கிலோ குட்கா மற்றும் ஒரு ஆட்டோவை போலிசார் பறிமுதல் செய்தனர்.
0
0