பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பரிந்துரையில் ஆட்சியர் நடவடிக்கை…

Author: Udayaraman
1 August 2021, 9:21 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர். அதன்படி வைப்பூர் கிராமத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய கண்ணன் என்பவர் மீதும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தமிழ்செல்வன் என்பவர் மீதும், விளந்தை கிராமத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சிவக்குமார் மற்றும் சின்னதுரை மீதும் வஞ்சினாபுரம் கிராமத்தில் கொலை வழக்கில் கைதான அருண்குமார் உள்ளிட்ட 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி இன்று உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.

Views: - 123

0

0