நிலம் வாங்கி தருவதாக கூறி 8 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது

Author: kavin kumar
21 August 2021, 4:29 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நிலம் வாங்கி தருவதாக கூறி 8 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் நந்தவனப்பட்டி வில்லவன் காலணியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் ஒட்டன்சத்திரம் கேதையுரம்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனக்கு 3 1/2 ஏக்கர் நிலம் வாங்க இலட்சுமணனை தொடர்பு கொள்கிறார். லட்சுமணன் கணேசனிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி 2019 ஆம் வருடம் சுமார் 8 லட்ச ரூபாய் முன்பணமாக வாங்கி உள்ளார். வாங்கிய பணத்திற்கு கடந்த இரண்டு வருடமாக நிலமும் வாங்கித்தரவில்லை கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை எனக் கூறி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்தமூன்று மாதங்களுக்கு முன் கணேசன் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரணை செய்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் லட்சுமணன் பணம் வாங்கி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் மோசடி செய்த லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Views: - 268

0

0