ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லுாரி மாணவர்

Author: kavin kumar
22 August 2021, 3:56 pm
Quick Share

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லுாரி மாணவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் ரயில் தண்டவாளத்தில் நேற்று 19 வயது மதிக்கதக்க வாலிபர் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அதில், இறந்து கிடந்தவர், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் கோபாலகிருஷ்ணன், திருவெண்ணெய்நல்லுார் அரசு கல்லுாரியில் பி.ஏ., தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது. இவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 117

0

0