காய்கறி வியாபாரத்தில் அசத்தும் பட்டதாரி இளைஞர்! இணைய வாடிக்கையாளர்களுக்கு இலவச விதைப்பந்துகள்!!

8 August 2020, 10:16 pm
Quick Share

கரூரில், பருவகால மாற்றத்தை பயன்தரும் வகையில் மாற்ற இணைய வழியாக காய்கறி வாங்குவோருக்கு விதைப்பந்துகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளரை கவரும் பட்டாதாரி இளைஞன்.

கரூர் காமராஜ் மார்கெட் பகுதியில் இணைய வழியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் பட்டதாரி இளைஞன் மகேஸ்வரன். கடந்த 8-மாதகாலமாக இந்த வியாபாரத்தை துவக்கி நடத்தி வருகிறார். கொரனோ காலத்திற்கு முன்பே இணைய வழி காய்கறி வியாபாரத்தை துவக்கியாதால் கொரனோ தடைக்காலத்தில் தனக்கும், தனது கடைக்கு வாடிக்கையாளர்களாக மாறிய பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது என கூறும் மகேஸ்வரன்,

தற்போது தனது வியாபாரத்தில் மக்களின் தேவையறிந்து அதற்கேற்றாற் போல் தனது வியாபாரத்தில் சில புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொரனோ வைரஸ் பராவமால் தடுக்க அரசு கூறிய வழிமுறைகளில் ஒன்றான சானிடைசரை பயன்படுத்த மக்களை பழக்கப்படுத்த வேண்டும் என்பதற்க்காக தனது கடையில் இணைய வழியாக காய்கறி வாங்குவோர்களுக்கு சானிடைசரை இலவசமாக வழங்கி அதனை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தற்போது பருவகாலம் துவங்கியுள்ளதால் விதைப்பந்துகளை வழங்கும் நிகழ்வை இன்று வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மகேஸ்வரன் மாற்றம் என்பது சமுதாயத்தில் ஏற்பட வேண்டுமென்றால் அது ஒவ்வொருவரின் வீட்டில் இருந்து துவக்கப்பட வேண்டும். அதில் ஒரு கட்டமாக தற்போது பருவமழை தமிழகத்தில் பெய்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் வரும் மாதங்களில் இன்னும் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிணேன். அதற்க்காகவே தற்போது எனது கடையில் இணைய வழியில் காய்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி வருகிறேன்.

இதில் வேப்பமரம், புளிய மரம், புங்கன், வாகை போன்ற 6-வகையான விதைகளை தேர்வு செய்து அதனை விதைப்பந்துகளாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தருகிறோம். இதன் நோக்கம் இன்று நடப்படுகின்ற இந்த விதைபந்துகள் வரும் காலங்களில் மரங்களாக தழைத்து அது மக்களுக்கும், இயற்க்கைக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதால் மாற்றம் என்பதை ஒவ்வொரு வீட்டில் இருந்து துவக்க வேண்டும் அப்போது தான் வாழும் சமுதாயத்தில் மாற்றம் வரும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை இன்று முதல் நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.

Views: - 0

0

0