புதுச்சேரி:புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 37 வது நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது, இதில் அரசு சார்பில் அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் 100 அடி சாலை, விழுப்புரம் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் சிலை அருகே மாணவிகளால் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் ஏவி சுப்பிரமணியம், முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்திரா காந்தி சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0
0