பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்: கூடுதல் தலைமைச் செயலாளர் பேட்டி

21 November 2020, 10:33 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் விஸ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் மற்றும் வருவாய்துறை, தீயனைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் காயல்பட்டினம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது. அடுத்து எவ்விதமான மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. கன மழை பெய்யும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்ப தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி மாநகராட்சியின் தாழ்வான இடங்களில் தேங்கும் தண்ணீர் மாநகராட்சி மூலமாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டம் நான்கு மாதங்களில் நிறைவடையும் போது நிரந்தர தீர்வு காணப்படும் என அவர் கூறினார்.

Views: - 18

0

0