பிளாட்பாரத்தில் தங்கியிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை: குற்றவாளியை கைது செய்து விசாரணை

Author: Udhayakumar Raman
16 October 2021, 6:29 pm
Quick Share

சென்னை: பிளாட்பாரத்தில் தங்கியிருந்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை, கண்ண பிரான் தெரு சந்திப்பில் உள்ள சென்னை மாநகராட்சி கட்டண கழிப்பிடம் அருகில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து கிடப்பதாக பொது மக்கள் காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரத்த வெள்ளத்தில் பிளாட் பாரத்தில் கிடந்த முதியவரின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக மாநகராட்சி கட்டண கழிப்பிடம் அருகே வசித்து வந்த மூர்த்தி என்பதும் ஆதரவுவற்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அங்கு சந்தேகத்திற்குகிடமாக நின்று இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவர் ஆந்திர மாநில திருப்பதியை சேர்ந்த ஹேமந்த் வயது 29 என்பதும் அவர் கடந்த சில மாத காலமாக முதியவரு டன் தங்கி இருந்ததும் இவர் தான் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொன்றதும் தெரிய வந்தது. ஹேமந்த் ஒரு ஆண்டு காலம் போரூரில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் கடந்த 6 மாதத்திற்கு முன் அங்கிருந்து தப்பித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஹேமந்த்தை கைது செய்த போலீசார், ஏன் ஹேமந்த் முதியவரை கல்லால் தாக்கி கொன்றார் என்பதை விசாரித்து வருகின்றனர்.

Views: - 130

0

0