சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.31 ஆயிரம் பறிமுதல்

21 October 2020, 11:11 pm
Quick Share

விருதுநகர்: காரியபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 5 மணி நேர சோதனை சார்பதிவாளர் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு கணக்கில் வராத ரூ.31 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர்க்கு தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு இணை ஆய்வு அதிகாரி பொன்ராஜ் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கருப்பையா, இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் காரியாபட்டி சார்- பதிவாளர் அலுவலகத்தில் இன்று மாலை 4 முதல் தீடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.31,850ஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சார்-பதிவாளர் இந்துநேசன் (38), இளநிலை உதவியாளர் விக்னேஷ் (34) அவர்களிடம் இது குறித்து கேட்டதற்க்கு முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தால் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 23

0

0