ஆரணி ஆற்றில் வெள்ளம்: சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

26 November 2020, 6:17 pm
Quick Share

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையின் உபரி நீர் 4 ஆயிரத்து 600 அடி திறப்பால் ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் 4 ஆயிரத்து 600 கன அடி நீரால் ஊத்துக்கோட்டை தரை பாலத்தை மூழ்கடித்தது மேலும் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை துண்டிக்கப்பட்டு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சென்றது இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தாலும் அதை உடனடியாக வருவாய் துறையினரும்,

காவல்துறையினரும் பேரிடர் மீட்பு துறையினரும், சிறப்பான முறையில் கையாண்டு அவர்களை தங்க வைக்கும் முகாம்களில் அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளதாகவும், நிவர் புயலினால் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். அப்பகுதியில் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டு இருந்ததால் சட்டமன்ற உறுப்பினர் மின்வாரியத்தில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பேசி மின்சாரம் உடனடியாக வழங்கப்பட்டது.

Views: - 11

0

0