கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

27 August 2020, 9:08 pm
Quick Share

சென்னை: சென்னை மற்றும் அதன்சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்று வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக அவ்வப்போது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து வருகிறது. அதன் பேரில் போலீசார் குற்றவாளிகளை பிடித்து கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொடுங்கையூர் குப்பை மேடு பகுதியில் நேற்று கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதலளித்துள்ளனர். இதில் சந்தோகமடைந்த போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் பல்வேநு பகுதிகளில் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 1

0

0