கொரோனா சிகிச்சை அதிக கட்டணம் வசூல்… மருத்துவமனையில் சுகாதாரதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

6 August 2020, 11:08 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் பத்துக்கும் மேற்பட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்ததுவமனைகளில் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதாக புகாரை அடுத்து கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும், அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும், சுகாதாரதுறையினர் மற்றும் வருவாய்துறையினர் கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலையில் உள்ள கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குநர் உத்தரவின் பேரில், மருத்துவதுறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டார் தனியார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த திடீர் ஆய்வு குறித்து கேட்டதற்கு அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நகர் காவல் நிலைய தலைமை காவலர் ஜெயபிரகாஷ் கொரோனா சிகிச்சை பெற்று கடைசியில் மூச்சு தினறல் அதிகம் ஏற்பட்டு அரசு மருந்தவமனைக்கு அழைத்து கொண்டு செல்லும் போதே அம்புலன்ஸ்-ல் உயிர் பிரிந்தது என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

உயிர் பிரியும் கடைசி நிலையில் சிகிச்சை பெற்று வந்த மீத பணம் 2 லட்சம் கட்டாயமாக கட்ட கூறியது தெரிய வருகிறது. தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிப்பாதாக புகார் எழுந்து வருவதால் நாளை அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Views: - 4

0

0