தேசிய சிலம்ப போட்டியில் பதக்கங்களை குவித்த வீரர்கள்:ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Author: Udhayakumar Raman
23 October 2021, 11:43 pm
Quick Share

திருச்சி: தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்த வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சுவர்ண பாரதி உள்விளையாட்டரங்கில் உலக யூனியன் சிலம்ப கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தேசிய சிலம்பப் போட்டியில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் திருச்சி திறுவெறும்பூர் வேழம் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் பயிற்சியாளர் சந்திரசேகர் தலைமையில் 40 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் 33 தங்கப்பதக்கங்களும்,23 வெள்ளி பதக்கங்களும்,11 வெண்கலப்பதக்கங்களும் வெற்றி பெற்றனர்.

குறிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் நடந்த ஆண்கள் பிரிவில் “போர்வீரன்” எனும் சிறப்பு போட்டியில் திருச்சி பூலாங்குடியை சேர்ந்த முகமது பாசித் எனும் மாணவன் கலந்து கொண்டு 5 நிமிடங்களில் நான்கு ஆயுதங்களை பயன்படுத்தும் போட்டியில் வெற்றி பெற்று “போர்வீரன்” என்னும் பட்டத்தையும் 15,000 பரிசுத் தொகையும் வென்றுள்ளார்.வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் வீரர்-வீராங்கனைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Views: - 107

0

0