கட்சிக் கொடி எரித்து பேனர் கிழித்து அட்டூழியம் : பாஜக புகார்!!

18 September 2020, 1:16 pm
BJP Banner - updatenews360
Quick Share

செங்கல்பட்டு : செய்யூர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் கொடியை எரித்து பேனரை கிழித்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்டது விளம்பூர் கிராமம். இக்கிராமத்தின் நுழைவாயில் பகுதியில் நேற்று பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜகவினர் சார்பில் கட்சிக்கொடி நடப்பட்டு வாழ்த்து பேனர்களை அமைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அக்கட்சியின் கொடியை உடைத்து சேதப்படுத்திய கட்சி கொடியை எரித்ததோடு ,வாழ்த்து பேனர்களை கிழித்தெரிந்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் கட்சி கொடி உடைக்கப்பட்டு இருந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற சூனாம்பேடு காவல்துறையினர் சேதப்படுத்தப்பட்ட கொடி மற்றும் பேனர்களை ஆய்வு செய்தனர். இதனிடையே பாஜகவினர் அங்கு கூடி இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூனாம்பேடு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

சூனாம்பேடு காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Views: - 8

0

0