செல்போன் திருடியதாக 2 மணி நேரமாக சிறுவன் மீது தாக்குதல்

14 May 2021, 2:54 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் அருகே செல்போன் திருடியதாக 2 மணி நேரமாக சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தேவரிஷி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜ், ராஜகிரி தம்பதியர். இருவரும் மறைந்து விட்டனர்.இவர்களுக்கு சுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் தற்போது குடியாத்தம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி ஆனந்தி அம்மாளிடம் தங்கி, குடியாத்தம் அடுத்த கல்லப்படி கிராமத்தில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா விடுமுறையால் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் கிராமத்தின் ஒருவர் வீட்டிற்குச் சென்று செல்போன் திருடியதாக பழி சுமத்தப்பட்டது.

இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கோபிநாத், உமாநாத் ஆகியோர் தலைமையில் சிறுவன் சுகுமாரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று, கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள புளிய மரத்தின் அடியில், சிறுவன் அணிந்திருக்கும் சட்டை, லுங்கி அனைத்தையும் கழட்டிவிட்டு அடிதுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கு ஒயர் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்க முடியாத சிறுவன் துடிதுடித்து கத்தி உள்ளான். இதனை அறிந்த கிராமத்தில் உள்ள ஒருவர் குடியாத்தம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் தாசில்தார் சரவணன் உத்தரவின் பெயரில் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, மற்றும் பரதராமி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர். அப்போது சிறுவனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருந்தது.பின்னர் சிறுவனை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சிறுவனை தாக்கிய நபர்களை குடியாத்தம் போலீசார் பரதராமி காவல்துறையினரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 125

0

0