கொலை வழக்கின் நேரடி சாட்சியை கொலை முயற்சி: முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

Author: Udayaraman
8 October 2020, 11:07 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை வழக்கின் நேரடி சாட்சியை கொலை முயற்சி செய்த முக்கிய குற்றவாளிகள் இருவரை வானூர் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஒருவர் தப்பிக்க முயன்றபோது தடுக்கி விழுந்தது காலில் முறிவு ஏற்பட்டது.

புதுச்சேரி ஐயங்குட்டி பாளையம் அமைதி நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் என்ற இளைஞர். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக பகுதியில் கடத்தப்பட்டதாக அவரது தாயார் புவனேஸ்வரி வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அரவிந்தை தேடி வந்த நிலையில் கடத்தப்பட்ட அரவிந்த் புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் வெட்டுப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே வானூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அரவிந்தை கடத்தி சென்றது புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் என்று தெரியவந்தது. மேலும் ராஜேஷ் பூத்துறையில் உள்ள ஒரு செம்மன் குவாரியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று போலிசார் ராஜேஷ் மற்றும் அவரின் கூட்டாளியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜேஷ் தன் அண்ணனான ரவுடி ஜெகன் கொலைக்கு பழிக்கு பழியாக கார்த்தி என்கிற கொஃப்பு கார்த்தியை படுகொலை செய்த வழக்கில் அரவிந்த தான் நேரடி சாட்சி என்பதால் அரவிந்தை கொலை செய்ய திட்டம் தீட்டி அவனை கடத்தி சென்றதாக கைதான ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளி ஒப்புகொண்டுள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து 1 இரு சக்கர் வாகனம் மற்றும் கத்தி அருவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த போலிசார், மேலும் இந்த கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர், அதே போல் போலிசாரை பார்த்த உடன் தப்பி ஒட முயன்ற ராஜேஷ் செம்மன் குவாரிக்குள் விழுந்ததால் அவரது இடது காலில் முறிவு ஏற்ப்பட்டது.

Views: - 27

0

0