சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்ட வங்கி : பூட்டி சீல் வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

10 May 2021, 4:32 pm
Quick Share

தஞ்சை: முழு ஊரடங்கு தொடங்கிய முதல் நாளிலே தஞ்சையில் அளவுக்கு அதிகமாக கூட்டத்தை கூட்டிய பாரத் ஸ்டேட் வங்கி சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 2 வது அலை அதிகரித்து வரும் நிலையில் தஞ்சையில் நேற்று முன்தினம் 857 பேரும் நேற்று 897 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கொரோனா தடுப்பு சிறப்பு மாவட்ட அதிகாரி சுப்பையன் தஞ்சை ஆட்சியர் கோவிந்த ராவ் உடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். என் நிலையில் இன்று முழு ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் எதிரிலே அமைந்துள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கூடியதோடு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் வங்கி நிர்வாகிகளும் இதனை கண்டுகொள்ளாமல் அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதுபோன்று அரசு விதிகளை அரசு நிறுவனங்களை மீறுவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற இடங்களுக்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று அபராத விதிப்பு அதோடு விதிகளை தொடர்ந்து மீறினால் பூட்டி சீல் வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 33

0

0