20 சதவிகித போனஸ் வழங்க வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7 November 2020, 7:58 pm
Quick Share

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த 20 சதவிகித போனஸ் வழங்க வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்திருந்தது. இந்த பத்து சதவிகித போனஸ் உத்தரவை ரத்து செய்து விட்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கிவந்த 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய தொழிற்சங்க பேரவையின் மாநில துணைத் தலைவர் தேவ் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பத்து சதவிகித போனஸ் ரத்து செய்துவிட்டு 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும்,

தீபாவளி பண்டிகைக்கு முன்பணமாக அட்வான்ஸ் கடன் வழங்க வேண்டும் கட்டுப்பாட்டு பிரிவில் அலுவலக பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் சுழற்சிமுறையில் பணி மூப்பு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்திடவேண்டும் 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து உடனே பேசி முடிவு எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது 7 அம்ச கோரிக்கைகள் தமிழக அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Views: - 19

0

0