பொதுமக்களுக்கு இடையூறாக திமுகவினர் வைத்திருந்த பெட்டிக் கடைகள்: களம் இறங்கிய மாநகராட்சி நிர்வாகம்

6 July 2021, 4:31 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக திமுகவினர் ஆக்கிரமித்து வைத்திருந்த 8 பெட்டிக் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஸ்பென்சர் காம்பவுண்டு பகுதி உள்ளது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்படுகிறது. இந்த மதுபான கடைக்கு பார் வசதி இல்லை. எனவே இந்தப் பகுதியில் பார் வசதி இல்லாததால் ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த சிலர் சிறிய சிறிய பெட்டி கடைகளை ஆக்கிரமித்து சாலையோரம் வைத்துள்ளனர். மது கடைக்கு வரக்கூடிய மது பிரியர்கள் மதுபானத்தை வாங்கி பெட்டிக்கடைகளில் டம்ளர் தண்ணிர் மற்றும் தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு சாலைகளில் ஓரத்தில் குடித்துவிட்டு மதுபோதையில் பலர் உடைகள் இன்றி கிடப்பதும் வாடிக்கையாக நடந்து வந்தது.

இதனால் அப்பகுதியில் வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் வணிக நிறுவனத்தினர் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து இன்று பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகைகள் வைக்கப்பட்டிருந்த 8 பெட்டிக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரின் துணையோடு அப்புறப்படுத்தினர்.

Views: - 79

0

0