பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

23 September 2020, 10:33 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சலாமாபாத் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவருடைய 14 வயது மகன் முகமத் சாத். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அருகே உள்ள ராமய்யன்தோப்பு பாலாற்றின் கிளை ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது மழை நீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இரவு நேரம் ஆகியும் மகன் வீட்டிற்கு வராததால் மகனை காணாமல் பல இடங்களில் அவருடைய பெற்றோர் தேடி வந்த நிலையில்,

இன்று மகன் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பாலாறு பகுதி வழியாக சென்றவர்கள் அங்கு சடலம் மிதப்பதாக கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது முகமது ஷாத் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த நகர போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1

0

0