பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை திருட்டு: மாதவரம் போலீசார் விசாரணை

Author: Udayaraman
5 August 2021, 6:53 pm
Quick Share

சென்னை: மாதவரத்தில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னை மாதவரம் கே.கே.ஆர் நகரில் வசிக்கும் அரசு ஊழியர் ராஜேஸ்வரி. இவருடைய சகோதரர் சூரியகுமார் வயது 60 ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேஸ்வரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இருவரும் ஒரு வேலை விஷயமாக வீட்டை பூட்டி விட்டு காரில் பெரம்பூர் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த மர்ம மனிதர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர்கள் சென்றவுடன் வீட்டின் பின்புறம் உள்ள மொட்டை மாடி வழியாக வீட்டின் பின்புற கதவைத் உடைத்து வீட்டில் உள்ளே இருந்த பீரோவில் 12 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்.

மறுபடியும் வீட்டிற்கு திரும்பி வந்த ராஜேஸ்வரி பெட் ரூமில் உள்ள பீரோ திறந்து கிடப்பதால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் அதில் 12 சவரன் நகைகள் திருடு போயிருந்தது.இதுகுறித்து உடனே குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மாதவரம் காவல் உதவி கமிஷனர் மற்றும் காவல் ஆய்வாளர் போலீசார் உடனே வந்து விசாரணை செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஸ்ரீஜா அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஆராய்ந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றார்.பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி வாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

Views: - 120

0

0