புதிய மின் மீட்டர் பொருத்த 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: வணிக ஆய்வாளர் கைது

22 February 2021, 9:32 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புதிய மின் மீட்டர் பொருத்த 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளுர் மாவட்டம் மோவூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது வீட்டிற்கு புதிய மின் மீட்டர் பொருத்த
பூண்டி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகியபோது வணிக ஆய்வாளர் லோகநாதன் என்பவர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து சுரேஷ் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் வணிக ஆய்வாளர் லோகநாதன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது அவரை மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கணக்கில் வராத 41 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து லோகநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0