தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கொரோனா அச்சத்தையும் மீறி குவிந்த மக்கள் கூட்டம் – போலீசார் தீவிர கண்காணிப்பு

8 November 2020, 5:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, நந்திக் கோவில் தெரு, என்.எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், பாத்திரக் கடைகள், இனிப்பகங்கள் நகை கடைகள் வார நாட்களில் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதியா
மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வந்த வண்ணம் உள்ளனர்.

திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கலிலிருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பகுதிகளில் கடல் அலை போன்று மனித தலைகளை காணமுடிகிறது. எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் 127 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துப்பட்டு காவல் துறையினர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக புற காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பகுதி முழுவதும் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதியை சுற்றி ஆறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்க வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் , சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பொதுவாகவே தீபாவளி காலங்களில் இந்த பகுதிகள் மக்கள் கூட்டங்களால் அலைமோதும் இருந்த போதும் தற்போது உள்ள சூழலில் கொரோனா காரணமாக அதிக அளவு மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தினால் கூட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிய ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தின் காரணமாக கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் குவிந்துள்ளனர்.

Views: - 20

0

0