மனைவி மற்றும் மகளை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

1 December 2020, 8:54 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மனைவி, மகளை கொலை செய்தவருக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி பிஅன்டி காலனியை சார்ந்த சிவதாணு மகன் சங்கர் (42) என்பவர் தனது மனைவி கோகிலா (26) மற்றும் தனது மகள் புவனா என்ற அட்சயா (03) ஆகிய இரண்டு பேரையும் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 29.05.2014 அன்று கொலை செய்தார். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

இவ்வழக்கை சிப்காட் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் இன்று குற்றவாளி சங்கர் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுபாஷினி ஆஜரானார்.

Views: - 21

0

0