சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் Akilan Institute-க்கு குவியும் பாராட்டுகள்!!

Author: Babu Lakshmanan
7 August 2021, 5:30 pm
Quick Share

தமிழக மாணவர்கள் வாழ்வில் நல்ல இலக்கை அடைய வழிகாட்டும் நோக்கில் கடந்த 2002ம் வருடம் Akilan Institute பயிற்சி வகுப்பை சிபிஎஸ்இ மாணவர்களுக்காக தொடங்கி நடத்தி வருகிறார் அகிலன்.

தமிழ்நாட்டிலேயே பிரபல சிபிஎஸ்இ பயிற்சி மையமாக செயல்பட்டு வரும் Akilan Institute லாப நோக்கத்தை மட்டுமே இலக்காக கொள்ளாமல், தங்களது அனுபவம் தமிழக மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

மாணவர்களின் குணாதிசயங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிகாட்டக் கூடிய சிறப்பான 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் மூலம், தமிழகத்திலேயே அதிக மதிப்பெண்களை பெரும் மாணவர்கள் Akilan Institute நிறுவனத்தை சேர்ந்தவர்களே எனும் நல்ல இடத்தை அடைந்துள்ளது.

கடந்த ஆறு வருடங்களாக சிபிஎஸ்இ தேர்வில் 490 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை Akilan Institute மாணவர்கள் பெற்று சாதனை புரிந்து வருகின்றனர். 1500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து பயனடைந்துள்ளனர்.

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்விலும், அவர்களை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தோடு Akilan Institute நிறுவனம் சார்பில் 2016 ஆம் ஆண்டு Marvel Classes என்னும் பயிற்சி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.

Marvel Classes மையத்தில் பயிற்சி பெற்ற 3ல் 2 பேர் என்ற வீதத்தில் மாணவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். தற்போது கொரோனா காரணமாக அனைத்தும் ஆன்லைன் மையமாகிவிட்டதால், மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயற்சியை ஆன்லைன் மூலம் Marvel Classes – டிஜிட்டல் மையம் வழியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது காலத்திற்கு ஏற்றார் போல் Akilan Institute பயிற்சி மையமும் CBSEeGuru வாக ஆன்லைன் யுகத்தில் கால் பதித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான கணிதம், வேதியியல், இயற்பியல், வணிகவியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய வகுப்புகளுக்கான பயிற்சியையும் ஆன்லைன் மூலம் ஆரம்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பயிற்சி மையங்களிலேயே Akilan Institute-ல் படித்த மாணவர்களின் பயிற்சி சதவீதம் தான் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு அறிவியல் குரூப் மாணவர்கள் 2 பேர், வணிகவியலில் குரூப் 2 பேர் மொத்தம் 8 பேர் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

டிஜிட்டல் தளத்தில் கால் பதித்துள்ள CBSEeGuru சிறந்த ஆசிரியர்கள், தொடர் தேர்வுகள், முறையான வழிகாட்டுதல்கள் மூலமாக மாணவர்களுக்கான பயிற்சியை இறுதியாண்டு தேர்வு எழுதப் போகும் முன்னாள் நாள் வரையிலும் கொடுக்கிறது. மாணவர்களை அவர்கள் பயிற்சி பெறும் வகுப்புகளில் 100க்கு 100 எடுக்க வைப்பதை குறிக்கோளாக கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். ஒரு மாணவர் உள்ளே வந்துவிட்டாலே கணிதம், வேதியியல், இயற்பியல், வணிகவியல், உயிரியல், கணினி அறிவியல் என முக்கிய பாடங்களில் கவனம் செலுத்துவோம். தமிழ்நாட்டிலேயே ஒரு பயிற்சி மையத்தில் 5 பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே இடம் Akilan Institute தான் என பெருமையுடன் தெரிவிக்கிறார் அந்நிறுவனத்தின் நிறுவனரான அகிலன். CBSEeGuru (Akilan Institute)-வில் இணைந்துவிட்டாலே உங்களது பிள்ளைகளின் வெற்றிக்கு 100க்கு 100 சதவீதம் நாங்க கேரண்டி என உறுதியும் கொடுக்கிறார்.

Views: - 441

0

0