இரவில் உலா வந்த காட்டுயானை: பொதுமக்கள் பீதி

Author: Udhayakumar Raman
23 March 2021, 10:37 pm
Quick Share

நீலகிரி: கூடலூரிருந்து மைசூர் செல்லும் தொரப்பள்ளி சாலையில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலை பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி உள்ளது நாள்தோறும் இச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக தொரப்பள்ளி சாலையில் திடீரென ஒற்றை காட்டு யானை உலா வந்தது இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர் மேலும் பொது மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் கூச்சலிட்டு அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்டி அடித்தனர். திடீரென சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Views: - 79

0

0