குமரி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் பிப்ரவரி 1-ந் தேதி தொடக்கம்.!

29 January 2021, 6:03 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கோழிக்கழிச்சல் பெருமளவில் கோழிகளில் இழப்பை ஏற்படுத்தும். நச்சுயிரியால் பரப்பப்படும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் ஒரு கோழியை தாக்கும்போது அது வேகமாக மற்ற கோழிகளுக்கும் பரவி மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

இந்த நோயை தடுப்பதற்காக குமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இருவார கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் குறியீடாக 2 லட்சத்து 40 ஆயிரம் டோசஸ் நிர்ணயம் செய்யப்பட்டு, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் தடுப்பூசி மருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி முகாமினை கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஊழியர்கள் மூலம் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட கிராமங்களில் நடத்திட உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களது அருகாமையில் இயங்கிவரும் கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை நிலையங்களை அணுகி தங்களது கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளினை அறிந்து தாங்கள் வளர்க்கும் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0