துணிச்சலான செயல்கள் செய்த அரசு ஊழியர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்;

18 November 2020, 1:25 pm
Quick Share

கன்னியாகுமரி: துணிச்சலான செயல்கள் செய்த அரசு ஊழியர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; ஆபத்துக் காலங்களில் உயிர்களை காப்பாற்றுதல் , திருடர்களிடமிருந்து உடைமைகளை காப்பாற்றுதல் போன்ற துணிச்சலான செயல்களைச் செய்த அரசு ஊழியர்களுக்கு அண்ணா பதக்கம் 2021 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

இந்த பதக்கத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தாங்கள் புரிந்த துணிச்சலான செயல் குறித்த விபரத்தை இணைக்கவேண்டும் .(பொது 1),தலைமை செயலகம் , என்ற முகவரிக்கோ அல்லது http://awards.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் அடுத்த மாதம் டிசம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பெறப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் நாளை மறுநாள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னைக்கு அனுப்ப வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.